» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லியோ பாடலுக்கு நடனமாடிய ஷிகர் தவான்: வைரல் விடியோ!

திங்கள் 24, ஜூலை 2023 5:33:10 PM (IST)



லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடலுக்கு கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நடனமாடியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தினை இயக்கி முடித்துள்ளார். இதில் த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளார்கள். லியோ படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

லியோ படத்தின் முதல் பாடலான 'நா ரெடி' பாடல் விஜய் குரலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்பாடல் துள்ளல் இசைப் பாடலாக உருவாகியுள்ளது. இதில் விஜய்யுடன் 100க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் நடனமாடி உள்ளனர். வெளியாகி பல நாள்கள் ஆகியும் இந்தப் பாடலின் வைஃப் ரசிகர்களிடம் இருந்து அகலவில்லை. இந்தப் பாடல் யூடியூபில் 74 மில்லியனை (7.4 கோடி) பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமிலும் இந்தப் பாடலுக்கு ரீல்ஸ் செய்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் நா ரெடி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory