» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

விராட் கோலியை சந்தித்து நெகிழ்ந்த மே.இ.தீவுகள் அணி வீரரின் தாயார்!

சனி 22, ஜூலை 2023 11:14:45 AM (IST)

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 76வது சர்வதேச சதத்தினை அடித்து அசத்தினார். டெஸ்டில் இது 29வது சதம் என்பதும் ஐந்து வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் சதமடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

போட்டியின்போது விக்கெட் கீப்பர் ஜோஷுவா டி சில்வாவும் விராட் கோலியும் பேசியது இணையத்தில் வைரலானது. விராட் கோலி சதமடிக்க வேண்டுமெனவும் அவரை சந்திக்க தனது தாயார் வந்திருப்பதாகவும் ஜோஷுவா டி சில்வா தெரிவித்தார். போட்டி முடிந்தப் பிறகு ஜோஷுவா டி சில்வாவின் தாயார் விராட் கோலியை சந்தித்து நெகிழ்ச்சியடைந்த விடியோ இணையத்தில் வைரலானது. விராட் கோலி சந்தித்து ஆனந்த கண்ணீருடன் அவர் கூறியதாவது:

‘நான் உன்னைப் (ஜோஷுவா டி சில்வா) பார்க்க வரவில்லை. ஏனெனில் உன்னை நான் தினமும் பார்க்கிறேன். அதனால் விராட் கோலியை பார்க்க மட்டுமே வருகிறேனென’ எனது மகனிடம் கூறினேன். இப்போதுதான் விராட் கோலியை முதன்முறையாக சந்திக்கிறேன். அவர் அழகான அற்புதமான மனிதர். அவரும் எனக்கு மகன் போலதான். விராட் கோலிக்கு அழகான மனைவியும் இருக்கிறார்கள். விராட் கோலி திறமையான கிரிக்கெட்டர். விராட் கோலி போலவே எனது மகனும் சிறப்பாக விளையாடுவாரென நம்புகிறேன்.




மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






CSC Computer Education



Thoothukudi Business Directory