» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கில் மீண்டும் சதம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!

சனி 27, மே 2023 10:32:55 AM (IST)


மும்பை அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் வெற்றி பெற்று குஜராத் அணி,  இறுதி போட்டியில் சென்னை அணியுடன் மோத உள்ளது. 

குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் விளையாடி மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்தது. முதலில் விளையாடிய குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில், மும்பை அணியின் பந்துவீச்சைப் சிதறடித்து 60 பந்துகளில் 129 ரன்கள் குவித்தார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் விளாசினார்.

அவருக்கு துணையாக நின்ற சாய் சுதர்ஷன் 43, கேப்டன் ஹர்திக் பாண்டியா 28 ரன்கள் குவித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 233 ரன்களை குஜராத் பேட்டர்கள் குவித்தனர். தொடர்ந்து, மாபெரும் இலக்கை விரட்டிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, வதேரா அடுத்தடுத்து அவுட்டாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.தொடர்ந்து களமிறங்கிய திலக் வர்மாவும், சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் முனைப்பில் அதிரடி காட்டினர். 14 பந்துகளில் 43 ரன்கள் எடுத்த நிலையில் திலக் வர்மா, ரஷித் கான் சூழலில் வீழ்ந்தார்.

அடுத்து லிட்டில் பந்தில் கிரீன் அவுட்டாக, சிறிது அதிரடி காட்டிய சூர்யகுமார் 61 ரன்களில் மோகித் சர்மா பந்தில் போல்டானார்.தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட்டாக 18.2 ஓவர்களில் 171 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மும்பை அணி ஆல் அவுட்டானது.சிறப்பாக பந்துவீசிய குஜராத் அணியின் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியை தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி எதிர்கொள்கிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory