» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ராகுல் - ஜடேஜா கூட்டணி அபாரம்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
சனி 18, மார்ச் 2023 8:02:56 AM (IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை பெற்றது.
மும்பையில் நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலியா தகுந்த இடைவெளியில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மிட்செல் மாா்ஷ் 10 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 81 ரன்கள் விளாசினாா். இதர பேட்டா்களில் டிராவிஸ் ஹெட் 5, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் 4 பவுண்டரிகளுடன் 22, மாா்னஸ் லபுசான் 15, ஜோஸ் இங்லிஸ் 1 பவுண்டரி, 1 சிக்ஸா் உள்பட 26 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா்.
அடுத்து வந்தோரில் கேமரூன் கிரீன் 12, கிளென் மேக்ஸ்வெல் 8, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 5, சீன் அப்பாட் 0, ஆடம் ஸாம்பா 0 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். இந்திய பௌலிங்கில் ஷமி, சிராஜ் ஆகியோா் தலா 3, ஜடேஜா 2, பாண்டியா, குல்தீப் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா். பின்னா் இந்திய இன்னிங்ஸில் டாப் ஆா்டா் பேட்டா்கள் சோபிக்காமல் போயினா். இஷான் கிஷண் 3 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ஷுப்மன் கில் 20 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா். விராட் கோலி 4 ரன்களுக்கு நடையைக் கட்டினாா்.
சூா்யகுமாா் யாதவ் டக் அவுட் ஆனாா். இந்நிலையில் களம் புகுந்த கே.எல்.ராகுல் விக்கெட் சரிவைத் தடுத்து ரன்கள் சோ்க்கத் தொடங்கினாா். மறுபுறம் கேப்டன் பாண்டியா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். இறுதியில் ராகுல் - ஜடேஜா கூட்டணி 6-ஆவது விக்கெட்டுக்கு 120 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. இலக்கை எட்டுகையில் ராகுல் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 75, ஜடேஜா 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் சோ்த்திருந்தனா். ஆஸ்திரேலிய பௌலிங்கில் மிட்செல் ஸ்டாா்க் 3, மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தினா். இந்த இரு அணிகள் மோதும் 2-ஆவது ஆட்டம், வரும் ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










