» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் 2023 தொடர்: நியூஸி. அணியில் வில்லியம்சன் விடுவிப்பு!

புதன் 15, மார்ச் 2023 10:39:34 AM (IST)ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் விதமாக நியூஸிலாந்து அணியில் இருந்து வில்லியம்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை அணியானது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் நியூஸிலாந்து அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 17-ம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது.

டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் இரு அணிகளும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 3 டி-20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதில் ஒருநாள் போட்டித் தொடரின் ஆட்டங்கள் வரும் 25, 28, 31-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் கலந்துகொள்ளும் விதமாக அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் செய்யப்படவில்லை.

இந்த வகையில் கேன் வில்லியம்சன் (குஜராத் டைட்டன்ஸ்), டிம் சவுதி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), டேவன் கான்வே, மிட்செல் சாண்ட்னர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இடம் பெறவில்லை. இவர்கள் 4 பேரும் 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் அவர்கள் இடம் பெற்றுள்ள ஐபிஎல் அணிகளுடன் இணைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில் இலங்கைக்கு எதிரான தொடருக்கான நியூஸிலாந்து அணியில் தென் ஆப்பிரிக்க வம்சாவளி வீரரான சாட் போவ்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் பென் லிஸ்டருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory