» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் கோலாகலத் துவக்கம் : முதல் ஆட்டத்தில் மும்பை வெற்றி

ஞாயிறு 5, மார்ச் 2023 10:12:22 AM (IST)



மகளிர் பிரீமியர் லீக்: வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.

முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர். துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான போடப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். 

Harmanpreet Kaur

முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது. 

அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார். இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


CSC Computer Education


Arputham Hospital






Thoothukudi Business Directory