» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மண்டல அளவிலான கராத்தே போட்டி. சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்.
ஞாயிறு 5, மார்ச் 2023 8:23:04 AM (IST)

தென் மண்டல அளவிலான கராத்தே போட்டியில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனர்.
தென் மண்டல அளவிலான கராத்தே போட்டி தூத்துக்குடி ஸ்பிக் நகரில் வைத்து அண்மையில் நடைபெற்றது . இதில் தென் தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டியின் தலைமை நடுவராக சோபுக்காய் கோஜுரியு கராத்தே டூ- இந்திய தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் ரென்ஷி. சுரேஷ்குமார் செயல்பட்டார்.
இதில் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலர் சென்சாய் முத்துராஜா தலைமையில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 4 தங்கப் பதக்கத்தையும், 10 வெள்ளிப் பதக்கத்தையும் 7 வெண்கல பதக்கத்தையும் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், பள்ளியின் இயக்குனர் டினோ மெலினா ராஜாத்தி, பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி, ஆசிரியர் ஜான் சாமுவேல், கராத்தே பயிற்சியாளர் மணிகண்டன் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










