» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை : அஸ்வின் முதலிடம்!

புதன் 1, மார்ச் 2023 4:13:09 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியச் சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் முதலிடம் பிடித்துள்ளார்.

36 வயது அஸ்வின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு டெஸ்டுகளில் 14 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்துவீச்சுத் தரவரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த ஆண்டர்சன், 2-ம் இடத்துக்கு இறங்கியுள்ளார். தரவரிசையில் பும்ரா 4-வது இடத்திலும் ஜடேஜா 8-வது இடத்திலும் உள்ளார்கள்.  ஆல்ரவுண்டர்களுக்கான ஐசிசி தரவரிசையில் ஜடேஜா, அஸ்வின் முதல் இரு இடங்களில் உள்ளார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory