» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி திரில் வெற்றி..!

செவ்வாய் 28, பிப்ரவரி 2023 12:08:50 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில்  1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 435 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 209 ரன்னில் ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது.

இதனால் 226 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்னுடனும், ஹென்றி நிகோல்ஸ் 18 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4-வது நாளான ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 162.3 ஓவர்களில் 483 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 258 ரன்களை வெற்றி இலக்காக நியூசிலாந்து நிர்ணயித்தது. இதை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில், இன்று 5-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. 

இறுதியில் இங்கிலாந்து அணி 256 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெலிங்டனில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில்  திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்களும், ஹென்றி 2 விக்கெட்களும், நீல் வாக்னர் 4 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஃபாலோ ஆன் செய்யக் கேட்கப்பட்ட ஒரு அணியால் இது 4வது வெற்றியாகும், மேலும் 1993 ஜனவரியில் அடிலெய்டில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்த பிறகு ஒரு அணி ஒரு டெஸ்டில் வென்றது இரண்டாவது முறையாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory