» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலியா 6-ஆவது முறையாக சாம்பியன்

திங்கள் 27, பிப்ரவரி 2023 11:38:36 AM (IST)



தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. 

கேப்டவுனிலுள்ள நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பெத் மூனி 74, கார்ட்னர் 29, ஹீலி 18 ரன்கள் எடுத்தனர். பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து தோல்வி கண்டது. இதையடுத்து 19 வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. 

இது டி20 உலகக் கோப்பையில் அந்த அணிக்குக் கிடைத்த 6-ஆவது சாம்பியன் பட்டமாகும். கடந்த 2018, 2020-ஆம் ஆண்டு போட்டிகளில் வாகை சூடிய ஆஸ்திரேலியா, தொடர்ந்து 3-ஆவது முறையாக (ஹாட்ரிக்) தற்போதும் கோப்பை வென்றிருக்கிறது. அந்த அணி இவ்வாறு "ஹாட்ரிக்' கோப்பை வெல்வது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன் 2010, 2012, 2014 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி தொடர்ந்து சாம்பியனானது குறிப்பிடத்தக்கது. 

மறுபுறம், சொந்த மண்ணில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியின் மூலம், வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்த தென்னாப்பிரிக்கா போராடி தோல்வியைத் தழுவியது. அந்த அணி பெüலிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளித்ததுடன், பேட்டிங்கிலும் முனைப்பு காட்டியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory