» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டெஸ்ட் கிரிக்கெட்டில் 145 வருடங்களில் முதல்முறை: புதிய சாதனை படைத்த ஹாரி புரூக்!
சனி 25, பிப்ரவரி 2023 12:18:18 PM (IST)

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸில் முதல் 800 ரன்களை குவித்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் புதிய சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணி 21 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜோ ரூட் நிதானமாக ஆடி சதம் அடித்தார். மறுமுனையில் இருந்த ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 315 எடுத்துள்ளது. ஹாரி புரூக் 184 ரன்களுடனும், ஜோ ரூட் 101 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
6-வது டெஸ்ட்டில் விளையாடும் ஹாரி புரூக்கிற்கு இது 4-வது சதம் ஆகும். 24 வயதாகும் அவர் தொடர்ந்து மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் ஹாரி புரூக் இன்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் 800 ரன்களை குறைந்த இன்னிங்ஸில் (9) எடுத்த பேட்டர் என்கிற பெருமையை அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு இந்திய பேட்டர் வினோத் காம்ப்ளி, 9 இன்னிங்ஸில் 798 ரன்கள் எடுத்திருந்தார். ஹெர்பர்ட் (9 இன்னிங்ஸில் 780 ரன்கள்), கவாஸ்கர் (9 இன்னிங்ஸில் 778 ரன்கள்), எவர்டன் வீக்ஸ் (9 இன்னிங்ஸில் 777 ரன்கள்) ஆகியோர் 9 இன்னிங்ஸில் அதிக ரன்கள் எடுத்த இதர பேட்டர்கள். ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக்கை ரூ. 13.25 கோடிக்குத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் அணி.
புரூக்கின் மிரட்டல் ஆட்டத்தை பார்த்து வியந்த இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் வெகுவாக பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் ஜோ ரூட் போல பேட்டிங் செய்ய வேண்டும் என்று அனைத்து குழந்தைகளும் விரும்பினர். தற்போது அடுத்த 10 ஆண்டுகளில் அதே குழந்தைகள் ஹாரி புரூக்கை போல விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)











CLOUD NINE MOVIESFeb 28, 2023 - 11:20:14 PM | Posted IP 162.1*****