» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டிஎன்பிஎல் ஏலம்: அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள் பட்டியல்!
வெள்ளி 24, பிப்ரவரி 2023 5:34:20 PM (IST)
டிஎன்பிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் சாய் சுதர்சன் அதிகத் தொகைக்குத் தேர்வாகியுள்ளார்.
டிஎன்பிஎல் 2022 கோப்பையை கோவை, சேப்பாக் ஆகிய இரு அணிகளும் பகிர்ந்துகொண்டன. இந்நிலையில் முதல்முறையாக டிஎன்பிஎல் போட்டிக்கு வீரர்கள் ஏலம் நடைபெற்றுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஏலத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சார்பாகப் பிரபல சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் பங்கேற்றார். அந்த அணி வீரராக சமீபத்தில் தக்கவைக்கப்பட்ட அஸ்வின், ஏலத்தில் பங்கேற்று வீரர்களின் தேர்வில் தன்னுடைய ஆலோசனையை வழங்கினார்.
ஏலத்தில் அதிகபட்சத் தொகையாகப் பிரபல பேட்டர் சாய் சுதர்சனை ரூ. 21.6 லட்சத்துக்குத் தேர்வு செய்தது லைகா கோவை கிங்ஸ். கடந்த வருடம் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 20 லட்சத்துக்கு சாய் சுதர்சனைத் தேர்வு செய்தது பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. தற்போது அதைவிடவும் அதிகத் தொகைக்கு டிஎன்பிஎல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளார் சுதர்சன்.
அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர்கள்
1. சாய் சுதர்சன் (லைகா கோவை கிங்ஸ்) - ரூ. 21.6 லட்சம்
2. சஞ்சய் யாதவ் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) - ரூ. 17.6 லட்சம்
3. ஷிவம் சிங் (திண்டுக்கல் டிராகன்ஸ்) - ரூ. 15.95 லட்சம்
4. சோனு யாதவ் (நெல்லை ராயல் கிங்ஸ்) - ரூ. 15.2 லட்சம்
5. அபிஷேக் தன்வர் (சேலம் ஸ்பார்டன்ஸ்) - ரூ. 13.2 லட்சம்
இதர தமிழக வீரர்களான சாய் கிஷோரை ரூ. 13 லட்சத்துக்கும் விஜய் சங்கரை ரூ. 10.25 லட்சத்துக்கும் அஜித் ராமை ரூ. 4.2 லட்சத்துக்கும் திருப்பூர் தமிழன்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. வாஷிங்டன் சுந்தரை ரூ. 6.75 லட்சத்துக்கு மதுரை அணி தேர்வு செய்துள்ளது. வருண் சக்ரவர்த்தியை ரூ. 6.75 லட்சத்துக்கு திண்டுக்கல் அணி தேர்வு செய்துள்ளது. நடராஜனை ரூ. 6.25 லட்சத்துக்கு திருச்சி அணி தேர்வு செய்துள்ளது. டிஎன்பிஎல் போட்டி ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










