» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒன்டே கிரிக்கெட் தொடர் : ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

வியாழன் 23, பிப்ரவரி 2023 4:30:16 PM (IST)

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டில் இந்திய அணி வென்றுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணி : பேட் கம்மின்ஸ், ஷான் அபாட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஷ், லபுஷேன், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜை ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory