» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா ராஜினாமா
வெள்ளி 17, பிப்ரவரி 2023 12:06:02 PM (IST)
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் இந்திய தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ரகசிய புலனாய்வு விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.அதில் "விராட் கோலி, கங்குலி இடையே ஈகோ பிரச்னைகள் இருந்தன. கிரிக்கெட் வாரியத்தை விடவும் தன்னை மிகப்பெரிய ஆளாக கோலி நினைத்துக் கொண்டார். யாரும் அவரைத் தொட முடியாது என்ற எண்ணமும் அவருக்கு இருந்தது. இந்திய வீரர்கள் உடல் தகுதி பெறாத நிலையில் ஊக்க மருந்து எடுத்து கொண்டனர்” என சர்ச்சைக்கு மிகுந்த கருத்துகளை பேசி இருந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதனை தொடர்ந்து சேத்தன் சர்மா மீது இந்திய அணி நிர்வாகம் தனது நம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை சேத்தன் சர்மா இன்று (பிப்.17) ராஜினாமா செய்திருக்கிறார். அவரது ராஜினாமாவை பிசிசிஐ எற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










