» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி தரவரிசை: அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணி முதல் இடம்!

புதன் 15, பிப்ரவரி 2023 3:40:05 PM (IST)



டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டைத் தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையிலும் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.

இந்த தொடர் முடிவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்கள் மற்றும் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அணிகளின் தரவரிசையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற அபார வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தற்போது அணிகளின் தரவரிசையில் இந்திய அணி டி20 (267 புள்ளி), ஒருநாள் (114 புள்ளி) மற்றும் டெஸ்ட்டில் (115 புள்ளி) என முதல் இடத்தில் உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியிடம் அடைந்த தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 106 புள்ளி, நியூசிலாந்து 100 புள்ளி, தென் ஆப்பிரிக்கா 100 புள்ளி அணிகள் 3 முதல் 5 இடங்களில் உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory