» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில் தேர்வு
செவ்வாய் 14, பிப்ரவரி 2023 11:44:51 AM (IST)

ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலுக்கான 3 வீரர்களில் 2 இந்திய வீரர்கள் தேர்வாகினர். அதன்படி, சிறந்த வீரர் விருதுக்கு நியூசிலாந்தின் டேவான் கான்வே, இந்தியாவின் ஷுப்மன் கில், முகமது சிராஜ் ஆகியோர் தேர்வாகினர்.
இந்நிலையில், ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷுப்மன் கில் வென்றார். ஷுப்மன் கில்லுக்கு கடந்த மாதம் மிகச்சிறப்பாக அமைந்தது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும், டி20 தொடரில் சதமும் அடித்து அசத்தினார். கடந்த மாதம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்தார். இதேபோல், ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இங்கிலாந்தின் கிரேஸ் ஸ்க்ரிவன்ஸ் வென்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










