» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்க பதக்கம் வென்ற இந்திய வீரர்

சனி 11, பிப்ரவரி 2023 12:32:13 PM (IST)



கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க நாளில், குண்டு எறிதல் வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் தங்கம் வென்றார்.

கஜகஸ்தான் நாட்டின் ஆஸ்தானா நகரத்தில் 2023-ம் ஆண்டுக்கான ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் ஆடவர் குண்டு எறிதல் போட்டியில், இந்தியாவின் நடப்பு தேசிய சாதனை படைத்த வீரரான தஜீந்தர்பால் சிங் தூர் கலந்து கொண்டார். அவர் போட்டியின்போது முதல் முயற்சியில் தவறினாலும், உஷாரான அவர், 3-வது மற்றும் 5-வது முயற்சிகளில் 19.49 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து தங்க பதக்கம் தட்டி சென்று உள்ளார். சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது முதல் தங்க பதக்கம் இதுவாகும்.

இந்த போட்டியில், 19 மீட்டர் தொலைவு குண்டு எறிந்த மற்றொரு ஒரே வீரரான கரண் சிங், 19.37 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து 2-வது இடம் பிடித்து உள்ளார். கஜகஸ்தானின் இவான் இவனோவ் 18.10 மீட்டர் தொலைவுக்கு குண்டு எறிந்து 3-வது இடம் பிடித்து உள்ளார். 2018-ம் ஆண்டு ஆசிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்றுள்ள சிங், 2019-ம் ஆண்டு ஆசிய சாம்பியன் வெளியரங்க போட்டியிலும் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தவர். 2018-ம் ஆண்டில் தெஹ்ரானில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory