» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகள்: ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை!

வியாழன் 9, பிப்ரவரி 2023 4:19:34 PM (IST)



டெஸ்ட் கிரிக்கெட்டில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.  டெஸ்ட் தொடர், இன்று முதல் தொடங்கியுள்ளது. நாகபுரியில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் கம்மின்ஸ், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு போல்ட் செய்து வெளியேற்றினார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் இது. இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற புதிய சாதனையை அஸ்வின் படைத்துள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000+ ரன்கள், 450+ விக்கெட்டுகளை எடுத்த வீரர்கள்

1. ஷான் வார்னே (3154 ரன்கள், 708 விக்கெட்டுகள்) 
2. ஸ்டூவர்ட் பிராட் (3550 ரன்கள், 566 விக்கெட்டுகள்) 
3. அஸ்வின் (3043 ரன்கள், 450 விக்கெட்டுகள்)


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory