» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவின் டி20 உலக கோப்பை ஹீரோ ஜோகிந்தர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

வெள்ளி 3, பிப்ரவரி 2023 4:23:33 PM (IST)



பாகிஸ்தானுக்கு எதிரான 2007 உலக டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் மறக்கமுடியாத மேட்ச் வின்னிங் இறுதி ஓவரை வீசிய முன்னாள் இந்திய மித வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் சர்மா, அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

2007 டி20 உலகக் கோப்பையின் பாகிஸதானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் வீசிய அந்த கடைசி ஓவர் ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர் நெஞ்சிலும் மறக்க முடியாத தருணமாக என்றென்றும் இருக்கும். கடைசி ஓவரில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ஓவரை வீசும் பொறுப்பை கேப்டன் தோனி, ஜோகிந்தர் சர்மா வசம் ஒப்படைத்தார். Wide வீசி ஓவரை துவங்கினார். 

இரண்டாவது பந்தில் மிஸ்பா-உல்-ஹக் சிக்ஸர் விளாசி இருந்தார். மூன்றாவது பந்தில் ஸ்கூப் ஆடி பைன்-லெக் திசையில் கேட்ச் ஸ்ரீசாந்த் வசம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருப்பார் மிஸ்பா. அதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் உலகக் கோப்பையை வென்று அசத்தி இருக்கும்.

அதன் மூலம் ஜோகிந்தர் சர்மா பிரபலமானார். இருந்தாலும் சர்வதேச அளவில் அதுதான் அவரது கடைசி போட்டி. ஹரியாணா அணிக்காக 2002 முதல் 2017 வரையில் அவர் விளையாடி உள்ளார். ஐபிஎல் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008 முதல் 2012 வரை விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது ஹரியாணா மாநில காவல்துறையில் மூத்த காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

"உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன். 2002 முதல் 2017 வரையிலான காலம் என் வாழ்நாளின் பொற்காலம். இந்திய அணிக்காக விளையாடியதில் பெருமை கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ, ஹரியாணா கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹரியாணா அரசுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கிரிக்கெட் சார்ந்த மற்றொரு பக்கத்தில் எனது பயணத்தை தொடங்க உள்ளேன். அதை அறிவிப்பதில் மகிழ்ச்சி” என அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory