» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள்
திங்கள் 30, ஜனவரி 2023 3:24:51 PM (IST)

தூத்துக்குடியில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஹோலி கிராஸ் கூடைப்பந்து பெற்றோர் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் ஜிம்கானா கிளப்பில் நடைபெற்றது.
இதில் முதல் இடத்தை பத்து வயதுக்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி ஏ அணியும், இரண்டாம் இடத்தை செயிண்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியும் பெற்றன. 12 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் அணியில் முதலிடத்தை அல்வேர்னியா பள்ளி, கோவையும், 2ம் இடத்தை ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியும், 3வது இடத்தை லேடி சிவசாமி சென்னை அணியும் 4வது இடத்தை செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி அணிகளும் பிடித்தன. 12 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் இடத்தை செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாவது இடத்தை தூத்துக்குடி விகாசா பள்ளியும் பெற்றன.
பரிசளிப்பு விழாவில் ஹோலி கிராஸ் தலைமை பயிற்சியாளர் எப். ரவி, ஜி.பி. ஜோ பிரகாஷ், தொழிலதிபர், சகோ. லசால் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்பால், ராஜா ஏஜென்சிஸ் மேலாளர் மோகன், அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் சூர்ய கலா, மாவட்ட கூடைப்பந்து சங்கத் தலைவர் பிரேமானந்தன், மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் பாலமுருகன் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் முதல்வர் பாத்திமா, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியைகள் சோபியா, சுஜிதா ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










