» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை : முகமது சிராஜ் முதலிடம்!

புதன் 25, ஜனவரி 2023 5:18:49 PM (IST)



ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். 

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் கடந்த ஒருவருட காலமாக ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான பும்ராவிற்கு காயம் ஏற்பட்டு அணியில் இடம்பெற முடியாத நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சு குறித்து பலரால் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவிற்கு பதில் முகமது சிராஜ் இடம் பிடித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்ட முகமது சிராஜ், இந்திய அணிக்கு பந்துவீச்சில் மிகவும் பக்கபலமாக செயல்பட்டு வருகிறார். வேகம், ஸ்விங் மற்றும் பவர்பிளேவில் விக்கெட்கள் என சிறப்பாக விளையாடி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். 

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி அசத்தினார். 28 வயதான முகமது சிராஜ் 20 போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஐசிசி ஒருநாள் போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் ட்ரென்ட் போல்ட் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர்களை பின்னுக்கு தள்ளி 729 புள்ளிகளுடன் முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறினார். ஜோஷ் ஹேசில்வுட் 727 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், 708 புள்ளிகளுடன் ட்ரென்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory