» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐசிசி சிறந்த டி20 வீரராக சூர்ய குமார் யாதவ் தேர்வு!

புதன் 25, ஜனவரி 2023 5:12:15 PM (IST)



2022ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி. விருதை இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தட்டி சென்றார். டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யாகுமார் யாதவ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் சூர்யாகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி மற்றும் சூர்யாகுமார் யாதவ் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியை அரையிறுதி வரை அழைத்துச்சென்றனர். மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இலங்கை அணியுடனான தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

பின்னர் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா ஒயிட்வாஷ் செய்தது. இந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலம் சர்வதேச அளவில் அதிவேகமாக 100 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார். 

அடுத்து நடைபெற உள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சூர்யாகுமார் யாதவ் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் 2022ம் ஆண்டின் ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக சூர்யாகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் டி20 வரலாற்றிலேயே சிறப்பான சாதனை படைத்துள்ளார் சூர்யகுமார் யாதவ் என ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education






Arputham Hospital



Thoothukudi Business Directory