» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உலகக்கோப்பை ஹாக்கி: நியூசிலாந்திடம் தோல்வி - வெளியேறியது இந்திய அணி!
திங்கள் 23, ஜனவரி 2023 10:52:43 AM (IST)

உலகக் கோப்பை ஹாக்கியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டி முறையில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது.
ஒடிஸா மாநிலம், புவனேசுவரம், ரூா்கேலாவில் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. குரூப் பிரிவு ஆட்டங்கள் முடிந்த நிலையில், இங்கிலாந்து, நெதா்லாந்து உள்பட 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெற்று விட்டன.
இந்நிலையில், மீதமுள்ள நான்கு காலிறுதி இடங்களுக்கு குரூப் பிரிவுகளில் இரண்டு, மூன்றாம் இடங்களைப் பெற்ற அணிகள் மோதுகின்றன. அதன்படி, கிராஸ்ஓவா் ஆட்டத்தில் நியூஸிலாந்துடன் இந்தியா இன்று மோதியது. இதில் கட்டாயம் வென்றால் தான் காலிறுதிக்கு முன்னேற முடியும் என்கிற நிலையில் இந்தியா களமிறங்கியது.
எனவே இன்றைய ஆட்டத்தில் அனல் பறந்தது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல் அடித்திருந்திருந்தன. இதனால் ஆட்டத்தில் பெனால்ட்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் 5-4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து காலிறுதியில் பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










