» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஐவர் கால்பந்து போட்டி : காயல்பட்டினம் அணி வெற்றி

வியாழன் 19, ஜனவரி 2023 3:16:06 PM (IST)



தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான மின்னொளி ஐவர் கால்பந்து போட்டியில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்றது. 

சாகுபுரம் டி.சி.டபிள்யூ. ஸ்போர்ட்ஸ் பிரிவு மற்றும் அலிமாமா புட்சால் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் அளவிலான 5-வது மின்னொளி ஐவர் கால்பந்து போட்டி சாகுபுரம் மைதானத்தில் 4 நாட்கள் நடைபெற்றது.  இந்த போட்டியில் பல்வேறு இடங்களில் இருந்து 20 அணிகள் பங்கேற்றன. நாக்அவுட் மற்றும் லீக் முறையிலான போட்டியை டி.சி.டபிள்யூ நிறுவன உதவி தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார்.

இறுதிப் போட்டியில் தூத்துக்குடி துறைமுக அணியும், காயல்பட்டினம் அணியும் மோதின. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் காயல்பட்டினம் அணி வெற்றி பெற்று பரிசு கோப்பை மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பிலான ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது. 2-வது இடத்தை பிடித்த தூத்துக்குடி அணி பரிசு கோப்பை மற்றும் சென்னை தொழிலதிபர் மண்ணடி ரபி சார்பிலான ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசை பெற்றது.

சிறந்த வீரர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன், சுற்றிப்போட்டி குழு நிர்வாகிகள் முகமது அலி, சுல்தான், இம்ரான், பைசல் உள்பட பலர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory