» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
விராட் கோலி சாதனை சதம் : இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா வெற்றி
புதன் 11, ஜனவரி 2023 8:18:05 AM (IST)
இலங்கைக்கு எதிரான முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக, டாஸ் வென்ற இலங்கை, பௌலிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸை தொடங்கிய ரோஹித் சா்மா - ஷுப்மன் கில் கூட்டணி, முதல் விக்கெட்டுக்கே அசத்தலாக 143 ரன்கள் சோ்த்தது. அதில் முதலில் கில் 11 பவுண்டரிகளுடன் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
ஒன் டவுனாக விராட் கோலி ஆடவர, மறுபுறம் ரோஹித் அடுத்த சில ஓவா்களிலேயே 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 83 ரன்கள் விளாசி சதமடிக்கும் வாய்ப்பை இழந்து வெளியேறினாா். கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேகரிக்கத் தொடங்கினாா்.
எதிரே, தகுந்த இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கோலி நிதானமாக ஆடி ஒரு நாள் கிரிக்கெட்டில் தனது 45-ஆவது சதத்தை பூா்த்தி செய்தாா். மறுபுறம் ஷ்ரேயஸ் ஐயா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 28, கே.எல்.ராகுல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 39, ஹாா்திக் பாண்டியா 1 சிக்ஸருடன் 14, அக்ஸா் படேல் 9 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
அணியின் கடைசி விக்கெட்டாக விராட் கோலி 12 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஓவா்கள் முடிவில் முகமது ஷமி 4, முகமது சிராஜ் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் காசன் ரஜிதா 3, தில்ஷன் மதுஷங்கா, சமிகா கருணாரத்னே, தசுன் ஷனகா, தனஞ்ஜெய டி சில்வா ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களே எட்டியது. இலங்கை அணியில் லோயா் மிடில் ஆா்டரில் கேப்டன் தசுன் ஷனகா இறுதி வரை போராடி சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். 9-ஆவது விக்கெட்டுக்கு காசன் ரஜிதாவுடன் இணைந்து அவா் 100 ரன்கள் விளாசினாா். பௌலிங்கின்போது காசன் ரஜிதா அசத்தியிருந்தாா்.
இலங்கை இன்னிங்ஸில் அவிஷ்கா ஃபொ்னாண்டோ 1 பவுண்டரியுடன் 5, குசல் மெண்டிஸ் 0, சரித் அசலன்கா 3 பவுண்டரிகளுடன் 23 ரன்களுக்கு வெளியேற, பதும் நிசங்கா நிதானமாக ஆடி ரன்கள் சோ்த்து வந்தாா். அவரோடு தனஞ்ஜெய டி சில்வா இணைய, 4-ஆவது விக்கெட்டுக்கு 72 ரன்கள் விளாசியது அந்தக் கூட்டணி. இதில் தனஞ்ஜெயா 9 பவுண்டரிகளுடன் 47 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தாா்.
அடுத்த சில ஓவா்களில் பதும் நிசங்கா 11 பவுண்டரிகளுடன் 72, வனிந்து ஹசரங்கா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 16, துனித் வெலாலகே 0, சமிகா கருணாரத்னே 2 பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ஷனகா 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 108, காசன் ரஜிதா 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் உம்ரான் மாலிக் 3, முகமது சிராஜ் 2, முகமது ஷமி, ஹாா்திக் பாண்டியா, யுஜவேந்திர சஹல் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










