» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் பிரிடோரியஸ் அறிவிப்பு

செவ்வாய் 10, ஜனவரி 2023 12:03:20 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் டுவைன் பிரிடோரியஸ் அறிவித்துள்ளார்.

33 வயது பிரிடோரியஸ் 2016 முதல் தென்னாப்பிரிக்க அணிக்காக 3 டெஸ்டுகள், 27 ஒருநாள், 30 டி20 ஆட்டங்களில் விளையாடி மொத்தமாக 77 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இரு உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடி டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவின் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்திய (பாகிஸ்தானுக்கு எதிராக 17 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள்) வீரராகவும் உள்ளார். 

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 164 ஸ்டிரைக் ரேட் வைத்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் முக்கியமான ஆல்ரவுண்டர் என்கிற பெயரைப் பெற்றிருந்தார். இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிடோரியஸ் அறிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிரிடோரியஸ் இடம்பெற்றுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory