» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சூர்யகுமார் அதிரடி சதம்: இலங்கைக்கு எதிரான டி-20 தொடரை வென்றது இந்தியா!
ஞாயிறு 8, ஜனவரி 2023 8:59:30 AM (IST)
சூர்யகுமார் யாதர் அதிரடி சதம் அடித்து அசத்த, இலங்கைக்கு எதிரான 3வது டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.
இலங்கை அணிக்கு எதிரான 3வது டி-20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் சேர்த்தது. சுப்மான் கில் 46 ரன்களும் ராகுல் திரிபாதி 35 ரன்களும் சேர்த்து அணிக்கு உதவினர். சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 112 ரன் சேர்த்தார். இதில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். இறுதியில் அக்ஷர் பட்டேல் 21 ரன்கள் சேர்த்தார்.
இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 229 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும் பாண்ட்யா, உம்ரான் மாலிக், சாஹல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.