» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஓய்வு அறிவிப்பு!
சனி 7, ஜனவரி 2023 10:16:50 AM (IST)
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவின் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா (36) அடுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக தெரிவித்துள்ளார். முன்னாள் இரட்டையர் சாம்பியன் பிப்ரவரியில் துபாயில் நடைபெறும் விடிஏ 1000 போட்டிக்கு பிறகு விடைபெறுவார் என கூறப்படுகிரது. மகளிர் டென்னிஸ் சங்கதிற்கு அளித்த பேட்டியில் சானியா மிர்சா ஓய்வு குறித்த செய்தியை வெளியிட்டார்.மிர்சா ஓய்வு பெறுவதற்கு உடல்நலக் காரணங்களை மேற்கோள் காட்டி உள்ளார். முன்னதாக, சானியா 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஓய்வு பெற விரும்பினார், ஆனால் அவர் முழங்கை காயம் காரணமாக யுஎஸ் ஓபனை தவறவிட்டார், அவரது ஓய்வு தாமதமானது.
முன்னதாக சானியா ஜனவரி மாதம் ஆஸ்திரேலியா ஓபனில் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடுவார். அவர் கஜகஸ்தானின் அன்னா டானிலினாவுடன் இணைந்து விளையாடுவார். சானியா மிர்சா ஆறு கிராண்ட்ஸ்லாம் இரட்டைய பட்டங்களுடன் இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனையாக விளங்கி வருகிறார். அவர் 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் பெண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 தரவரிசையில் அதிக புள்ளிகள்: தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை!
புதன் 17, டிசம்பர் 2025 3:27:02 PM (IST)

ஐபிஎல் மினி ஏலத்தில் மெகா விலை: கேமரூன் ரூ.25.20 கோடி; பதிரனா ரூ.18 கோடி; லியாம் ரூ.13 கோடி!!
புதன் 17, டிசம்பர் 2025 12:14:19 PM (IST)

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)










