» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
ஆசியக்கோப்பை அறிவிப்பில் ஒருதலை பட்சம்: பிசிசிஐ மீது பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
வெள்ளி 6, ஜனவரி 2023 4:58:21 PM (IST)
2023 ஆசியக் கோப்பைப் போட்டி குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவருமான ஜெய் ஷா வெளியிட்டுள்ளார்.
இந்திய அணி ஆசியக் கோப்பை ஏழு முறை வென்றுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசியக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வருடம் இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. இதனால் 2023 ஆசியக் கோப்பைப் போட்டியும் செப்டம்பரில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறவுள்ளது.
6 அணிகள் கலந்துகொள்ளும் போட்டியில் இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் உள்ளன. எனவே, இரு அணிகளும் ஆசிய கோப்பை தொடரில் மோதவுள்ளன. இந்த போட்டித் தொடர் எங்கு நடைபெறும் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை .
2023ஆம் ஆண்டில் ஆசிய கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டது. அ இந்திய அணி பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்யாது ஜெய் ஷா கருத்து தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலுக்கு மத்தியில் தான் இந்த அட்டவணையை ஜெய் ஷா நேற்று வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் ஜெய்ஷாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி டுவிட்டரில் கூறியதாவது: ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் 2023-24-ம் ஆண்டுக்கான கட்டமைப்பு மற்றும் போட்டி பட்டியலை ஒரு தலைபட்சமாக வழங்கிய ஜெய்ஷாவுக்கு நன்றி. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் நடத்துகிறது. அதில் நீங்கள் இருக்கின்ற வேளையில் எங்களது பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி பட்டியலையும் வழங்கி இருக்கலாம். விரைவான பதில் பாராட்டப்படும் என்று கிண்டல் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருக்கு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 22, 2022 தேதியிட்ட மின்னஞ்சல் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உட்பட பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் போட்டி அட்டவணை தனித்தனியாகத் தெரிவிக்கப்பட்டது. சில உறுப்பினர் வாரியங்களிடமிருந்து பதில்கள் பெறப்பட்டாலும், (பிசிபி), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கருத்துகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் எதுவும் பெறப்படவில்லை மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, சேத்தியின் கருத்துகள் ஆதாரமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1685445174.jpg)
ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாட விரும்புகிறேன்: தோனி உருக்கம்
செவ்வாய் 30, மே 2023 4:40:36 PM (IST)

ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி சாம்பியன்
செவ்வாய் 30, மே 2023 9:11:33 AM (IST)

மின்னொளி கபடி போட்டி: கூடங்குளம் அணி வெற்றி
திங்கள் 29, மே 2023 3:18:15 PM (IST)

அகில இந்திய ஹாக்கி போட்டி: நியூடெல்லி அணி சாம்பியன்!!
திங்கள் 29, மே 2023 10:19:53 AM (IST)

கில் மீண்டும் சதம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!
சனி 27, மே 2023 10:32:55 AM (IST)

லக்னோவை வெளியேற்றியது மும்பை: குவாலிபயர்-2 ஆட்டத்திற்கு தகுதி!
வியாழன் 25, மே 2023 9:06:15 AM (IST)
