» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அக்‌ஷர், சூர்யகுமார் அதிரடி அரைசதம் வீண் : இந்தியா போராடி தோல்வி!

வெள்ளி 6, ஜனவரி 2023 10:05:51 AM (IST)இலங்கைக்குஎதிரான 2வது டி20யில் சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் அதிரடியாக அரைசதம் விளாசியும் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று இரவு புணேவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கேப்டன் தசுன் ஷானகா (56*), குஷால் மெண்டிஸ் (52) அதிரடியால் இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

அடுத்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இஷான் 2 ரன்கள், சுப்மன் கில் 5 ரன்கள், ராகுல் த்ரிபாதி 5 ரன்கள், ஹார்திக் பாண்டியா 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். 4.4 ஓவரில் இந்திய அணி 34/4 ஆக இருந்தது.  பின்னர் ஜோடி சேர்ந்து ஆடிய அக்‌ஷர் படேல், சூர்யகுமார் யாதவ் இலங்கை அணியின் பந்து வீச்சினை நாலாபுறமும் சிதறியடித்தனர். இதில் அக்‌ஷர் படேல் 20 பந்துகளில் 50 ரன்களை அடித்து அசத்தினர். இலங்கையின் நட்சத்திர ஸ்பின்னர் ஹசரங்கா ஓவரை பிரித்து மேய்ந்தனர். 

15.5வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிக்க முயன்று மதுஷனகா ஓவரில் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால், இந்தியாவின் வெற்றிக்கான வாய்ப்பு மங்கத் தொடங்கியது..  பின்னர் ஷிவம் மாவி (26) அதிரடியாக விளையாடினார். அக்‌ஷர் படேல் 31 பந்துகளில் 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரை இலங்கை கேப்டன் ஷானகா அற்புதமாக வீசினார். 

20 ஓவர் முடிவில் இந்திய 8 விக்கெட்டுகள் இழந்து அணி 190 ரன்கள் எடுத்தது. 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கை அணி தொடரை 1-1 என சமநிலையில் வைத்துள்ளது.  தசுன் ஷானகா தனது சிறப்பான பேட்டிங், பந்து வீச்சிற்காக ஆட்டநாயகன் விருதினை பெற்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory