» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்: ரஞ்சி கோப்பை வரலாற்றில் உனாட்கட் சாதனை!

புதன் 4, ஜனவரி 2023 5:03:21 PM (IST)ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற சாதனையை ஜெயதேவ் உனாட்கட் படைத்துள்ளார். 

ராஜ்கோட்டில் நடைபெறும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் தில்லி - செளராஷ்டிரம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தில்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதல் ஓவரிலேயே மூன்று விக்கெட்டுகளை எடுத்து ஆச்சர்யப்படுத்தினார் செளராஷ்டிர அணி கேப்டனான உனாட்கட். மூன்றாவது பந்தில் துருவ் ஷோரேவை போல்ட் செய்தார். அடுத்த இரு பந்துகளில் வைபவ், யாஷ் துல் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஹாட்ரிக் எடுத்தார். இதன்மூலம் ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல் ஓவரில் ஹாட்ரிக் எடுத்த முதல் பந்துவீச்சாளர் என்கிற சாதனையைப் படைத்தார். 

தனது 2-வது ஓவரில் ஆயுஷ் பதோனி, ஜான்டி சித்து ஆகியோரின் விக்கெட்டுகளையும் எடுத்து 5 விக்கெட்டுகளை 2 ஓவர்களுக்குள் எடுத்து அசத்தினார். தில்லி அணியின் முதல் 5 பேட்டர்களில் 4 பேர் டக் அவுட் ஆனார்கள்.  உனாட்கட் இ 2022 இறுதியில் வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் உனாட்கட் விளையாடினார். 31 வயது உனாட்கட், 12 வருடங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்தார். இந்திய அணிக்காக 2 டெஸ்ட்கள், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory