» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஸ்ரீ அம்பாள் வித்யாலயா பள்ளி மாணவர்கள் தேர்வு

புதன் 4, ஜனவரி 2023 12:19:04 PM (IST)அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிக்கு ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி ஜனவரி மாதம் 28ஆம் தேதி கோவாவில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு விளாத்திகுளம் ஸ்ரீ அம்பாள் வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியைச் சேர்ந்த கிருத்திக் சர்வான், நளீன் க்ரிஷ், ஹர்ஷத் ராஜ், சமர்ஜித், மிதுலா, ரவிசங்கர், பிரகதீஸ், சொகித், கிருஷ், ஆதேஷ், நவீன், டெனில்சன், தினேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர். 

தேர்வு பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகியும் விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மார்க்கண்டேயன், பள்ளி தாளாளர் விமராஜ், பள்ளி செயலாளர் சுப்பா ரெட்டியார், பள்ளி இயக்குனர் இந்திரா ராமராஜு, பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் மற்றும் கராத்தே பயிற்சியாளர் சென்சாய் முத்துராஜா ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory