» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்து போட்டிகள் துவக்கம்

செவ்வாய் 3, ஜனவரி 2023 8:34:08 PM (IST)தூத்துக்குடியில் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்து  இன்று தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்ற துவக்க விழாவில் தமிழ்நாடு கால்பந்து கழகம் மற்றும் தூத்துக்குடி கால்பந்து கழக தலைவர் சேசையா வில்லவராயர், மாவட்ட விளையாட்டு அலுவலர்  எஸ் அந்தோணி அதிர்ஷ்டராஜ் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். மாவட்ட கால்பந்து கழக செயலர் ஐ. லூர்து பிரிஸ், அன்டோ மச்சாது, ஹாட்லி மச்சாது  ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 

போட்டிகள் இன்று தொடங்கி ஜன.6ம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்த 14 அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும் நடைபெறும்.  இன்று மாலை நடந்த முதல் போட்டியில் தூத்துக்குடி லசால் பள்ளியும் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணிகளும் விளையாடின. இதில்  புனித லசால் பள்ளி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham HospitalThoothukudi Business Directory