» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் மகளுக்கு அனுப்பிய மெஸ்ஸி

வியாழன் 29, டிசம்பர் 2022 10:57:50 AM (IST)கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி தனது கையொப்பமிட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை தோனியின் செல்ல மகள் ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். 

கால்பந்தாட்ட கோல்கீப்பராக தனது விளையாட்டு கரியரை தொடங்கியவர் தோனி. பின்னர் கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக உருவெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட்டில் ஐசிசி நடத்தும் அனைத்து தொடர்களையும் வென்ற ஒரே கேப்டனும் அவர்தான். தோனி மற்றும் மெஸ்ஸி இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அதனை உலகக் கோப்பையை வைத்தே ஓர் உதாரணமாக சொல்லலாம். இருவரும் தங்கள் நாட்டை உலகக் கோப்பை தொடரில் வழிநடத்தி சாம்பியன் பட்டம் வெல்லச் செய்தவர்கள். 

இருவருமே இறுதிப் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியவர்கள். அவர்கள் விளையாடிய விளையாட்டு மட்டும்தான் இங்கு வேறுபடுகிறது. இந்தச் சூழலில் உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு தோனியின் ஏழு வயதான மகள் ஸிவாவுக்கு அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸியை தனது கையொப்பமிட்டு மெஸ்ஸி அனுப்பி உள்ளார். "Para Ziva என அவர் ஸ்பானிய மொழியில் எழுதி தனது கையொப்பமிட்டு இந்த ஜெர்ஸியை மெஸ்ஸி, ஸிவாவுக்கு அனுப்பியுள்ளார். அதனை ஆசையுடன் ஸிவா அணிந்துகொண்டு ‘அப்பாவை போலவே மகளும்’ என கேப்ஷன் கொடுத்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


Thoothukudi Business Directory