» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டி-20, ஒன்டே கிரிக்கெட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!
புதன் 28, டிசம்பர் 2022 11:03:21 AM (IST)
இலங்கைக்கு எதிரான டி 20 அணிக்கு ஹர்த்திக் பாண்டியாவும், ஒருநாள் அணிக்கு ரோகித் சர்மாவும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2-வது ஆட்டம் புனேயிலும் (ஜன.5-ந்தேதி), 3-வது ஆட்டம் ராஜ்கோட்டிலும் (ஜன.7) நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டிகள் கவுகாத்தி (ஜன.10), கொல்கத்தா (ஜன.12) திருவனந்தபுரம் (ஜன.15) ஆகிய இடங்களில் நடத்தப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். வங்காளதேச தொடரில் மோசமாக ஆடிய 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார். 50 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தொடக்க வீரர் வரிசைக்கு இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில்லுக்கு முன்னுரிமை அளிக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதால், தவானுக்கு இனி வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். அதே சமயம் தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு திரும்புகிறார்.
இலங்கை தொடருக்கான இந்திய 20 ஓவர் அணி: ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ்குமார்.
இந்திய ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்
_1685445174.jpg)
ரசிகர்களுக்காக மீண்டும் ஒரு சீசன் விளையாட விரும்புகிறேன்: தோனி உருக்கம்
செவ்வாய் 30, மே 2023 4:40:36 PM (IST)

ஐபிஎல் 2023: குஜராத்தை வீழ்த்தி 5வது முறையாக சென்னை அணி சாம்பியன்
செவ்வாய் 30, மே 2023 9:11:33 AM (IST)

மின்னொளி கபடி போட்டி: கூடங்குளம் அணி வெற்றி
திங்கள் 29, மே 2023 3:18:15 PM (IST)

அகில இந்திய ஹாக்கி போட்டி: நியூடெல்லி அணி சாம்பியன்!!
திங்கள் 29, மே 2023 10:19:53 AM (IST)

கில் மீண்டும் சதம்: மும்பையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குஜராத் அணி!
சனி 27, மே 2023 10:32:55 AM (IST)

லக்னோவை வெளியேற்றியது மும்பை: குவாலிபயர்-2 ஆட்டத்திற்கு தகுதி!
வியாழன் 25, மே 2023 9:06:15 AM (IST)
