» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் ஏலம்: அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்

வெள்ளி 23, டிசம்பர் 2022 5:37:32 PM (IST)ஐபிஎல் ஏலத்தில் ஆல் ரவுண்டர் சாம் கரன் ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்ஸை சென்னை அணி  ரூ.16.25 கோடிக்கு வாங்கியது.

ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் கொச்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பத்து அணிகளும் தங்கள் தேவைகளை மனதில் வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கி வருகின்றன. மும்பை, சென்னை போன்ற அணிகள் இந்த ஏலத்தில் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அது சார்ந்த நகர்வுகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப், சென்னை, குஜராத், டெல்லி, மும்பை, லக்னோ, பெங்களூரு போன்ற அணிகள் இந்த ஏலத்தில் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது. இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடிய பேட்ஸ்மேன்கள், ஆல் ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என 5 செட் வீரர்கள் ஏலத்தில் வந்துள்ளனர். இதில் அதிக விலை கொடுத்து அணிகளால் வாங்கப்பட்டுள்ள டாப் 5 வீரர்கள் யார் என்பதை பார்ப்போம்.

சாம் கரன் - ஆல் ரவுண்டர் - ரூ.18.50 கோடி - பஞ்சாப் கிங்ஸ்

கேமரூன் க்ரீன் - ஆல் ரவுண்டர் - ரூ.17.50 கோடி - மும்பை இந்தியன்ஸ்

பென் ஸ்டோக்ஸ் - ஆல் ரவுண்டர் - ரூ.16.25 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்

நிக்கோலஸ் பூரன் - விக்கெட் கீப்பர் - ரூ.16 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

ஹாரி ப்ரூக் - பேட்ஸ்மேன் - ரூ.13.25 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory