» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மே.இ. தீவுகள் தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு : அஸ்வினுக்கு வாய்ப்பு!

வியாழன் 14, ஜூலை 2022 4:06:52 PM (IST)

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது.  இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி20 தொடரில் கோலி, பும்ரா, சஹால் ஆகியோர் ஓய்வு காரணமாக அணியில் இடம்பெறவில்லை. 18 பேர் கொண்ட அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார். காயம் காரணமாக இங்கிலாந்து தொடர்களில் இடம்பெறாத கே.எல். ராகுல் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

கடந்த நவம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம்பெறாத தமிழகத்தைச் சேர்ந்த ஆர். அஸ்வின், மே.இ. தீவுகள் டி20 தொடருக்குத் தேர்வாகியுள்ளார். குல்தீப் யாதவ், ரவி பிஸ்னாய், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களும் அணியில் உள்ளார்கள். மே.இ. தீவுகள் ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட பாண்டியா, ரிஷப் பந்த் டி20 தொடருக்குத் தேர்வாகியுள்ளார்கள். 

அணியில் உம்ரான் மாலிக்குக்கு இடமில்லை. அவருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் தேர்வாகியுள்ளார். ராகுலும் குல்தீப் யாதவும் தங்களுடைய உடற்தகுதியை நிரூபிக்கவேண்டும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜூலை 22 அன்றும் டி20 தொடர் ஜூலை 29 அன்றும் தொடங்குகின்றன. 

இந்திய டி20 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த், பாண்டியா, ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஆர். அஸ்வின், ரவி பிஸ்னாய், குல்தீப் யாதவ், புவனேஸ்வர் குமார், அவேஷ் கான், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory