» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி-20 அணியில் இருந்து கோலியை நீக்க வேண்டியது கட்டாயம்: கபில்தேவ் பேட்டி

சனி 9, ஜூலை 2022 4:53:13 PM (IST)

டி20 ஆடும் லெவனில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என முன்னாள் கேப்டன் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி: பல ஆண்டுகளாக கோலி பேட்டிங் செய்ததை போல் தற்போது செயல்படவில்லை. இருப்பினும் முந்தைய செயல்பாட்டால் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால் சிறப்பாக செயல்படவில்லை என்றால், நீங்கள் செயல்படும் இளைஞர்களை அணியிலிருந்து விலக்கி வைக்க முடியாது. அணியில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும், கோலியின் அந்தஸ்து தேர்வு செய்யப்படுவதற்கான அளவுகோலில் இருக்கக்கூடாது.

டி20 ஆடும் லெவனில் இருந்து கோலியை நீக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. உலகின் நம்பர் 2 பந்துவீச்சாளர் அஸ்வினை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கும்போது, உலகின் நம்பர் 1 பேட்டரை (கோலி)யும் வெளியேற்றலாம். இளைஞர்கள் விராட்டை விஞ்ச வேண்டும் என்ற நேர்மறையான அர்த்தத்தில் அணியில் இடங்களுக்கான போட்டியை நான் விரும்புகிறேன். நீங்கள் அதை ஓய்வு என்று அழைக்கலாம், வேறு யாராவது அதை நீக்கம் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு நபருக்கும் அவரவர் பார்வை இருக்கும்.

வெளிப்படையாக, தேர்வாளர்கள் அவரை (கோலி) தேர்வு செய்யவில்லை என்றால், அது ஒரு பெரிய வீரர் செயல்படாததால் இருக்கலாம். நீங்கள் ஒரு நிலையான வீரராக இருக்கலாம், ஆனால் நீங்கள் தொடர்ச்சியாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியுற்றாலும் உங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதில் என்று அர்த்தமும் இல்லை, என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory