» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் தொடர்: தவான் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!

புதன் 6, ஜூலை 2022 4:05:34 PM (IST)



வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான்  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி இம்மாதம், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி,5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி வருகிற ஜூலை 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார் மேலும் ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory