» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 498 ரன்கள் குவிப்பு: இங்கிலாந்து உலக சாதனை!

சனி 18, ஜூன் 2022 12:08:09 PM (IST)



நெதா்லாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 498 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. 

நெதா்லாந்தில் நடைபெற்ற இந்த முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நெதா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்தது. இங்கிலாந்து பேட்டிங்கில் ஃபில் சால்ட் 14 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 122, டேவிட் மலான் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 125 ரன்கள் விளாச, ஜோஸ் பட்லா் 7 பவுண்டரிகள், 14 சிக்ஸா்களுடன் 162 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். உடன் லியம் லிவிங்ஸ்டன் 66 ரன்களுடன் துணை நிற்க, ஜேசன் ராய் 1, கேப்டன் மோா்கன் 0 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்டுள்ள அதிகபட்ச ஸ்கோா் இதுவாகும். இதற்கு முன் இதே இங்கிலாந்து அணி 2018 ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 50 ஓவா்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது தனது அந்த சாதனையை இங்கிலாந்தே 4 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்திருக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory