» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தினேஷ் கார்த்திக், அவேஷ் கான் அபாரம்: 4வது டி-20யில் தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா!
சனி 18, ஜூன் 2022 10:25:53 AM (IST)

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
ராஜ்கோட்டில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா, பவுலிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு பேட்டிங்கில் எதிர்பார்த்த சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. 81 ரன்களுக்குள் ருதுராஜ், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், பந்த் என டாப் நான்கு பேட்ஸ்மேன்கள் அவுட்டாகி இருந்தனர். இதில் கிஷன் மட்டுமே 27 ரன்கள் எடுத்து ஆறுதல் கொடுத்தார். பின்னர் ஐந்தாவது விக்கெட்டிற்கு ஹர்திக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் இணைந்தனர்.
இருவரும் 33 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தனர். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். கார்த்திக் 27 பந்துகளில் 55 ரன்கள் குவித்திருந்தார். 15 ஓவர்கள் முடிவில் இந்தியா வெறும் 96 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 5 ஓவர்களில் 73 ரன்களை இந்தியா எடுத்தது. அதற்கு தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா உதவினர். 20 ஓவர்கள் முடிவில் 169 ரன்களை எடுத்தது இந்தியா.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாபிரிக்க அணி 16.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 82 ரன்கள் என்ற வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பெறும் 2வது வெற்றி இதுவாகும். தென்னாப்பிரிக்காவும் 2 வெற்றிகள் பெற்றுள்ளன என்பதால் நாளை மறுநாள் பெங்களூருவில் நடைபெறும் கடைசி போட்டி மிகவும் எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது. அவேஷ் கான் இந்த போட்டியில் 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி20 கிரிக்கெட்டில் 300+ ரன்கள் குவிப்பு: புதிய வரலாறு படைத்த நேபாளம் அணி
புதன் 27, செப்டம்பர் 2023 11:48:13 AM (IST)

ஆசிய விளையாட்டு போட்டி: துப்பாக்கி சுடுதல் மகளிர் பிரிவில் இந்தியாவுக்கு தங்க பதக்கம்!
புதன் 27, செப்டம்பர் 2023 11:03:52 AM (IST)

தூத்துக்குடியில், 7-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 8:23:14 AM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி: தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் மகளிர் அணி!
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 11:37:29 AM (IST)

ஒருநாள் போட்டிகளில் 3000+ சிக்ஸர்கள் : இந்திய அணி வரலாற்றுச் சாதனை!
திங்கள் 25, செப்டம்பர் 2023 3:44:33 PM (IST)

கரீபியன் பிரிமியர் லீக் டி-20: கோப்பை வென்ற இம்ரான் தாஹீர் அணி!
திங்கள் 25, செப்டம்பர் 2023 11:30:59 AM (IST)
