» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்..!

வியாழன் 19, மே 2022 5:50:11 PM (IST)உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் அரை இறுதியில் பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

12-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 52 கிலோ உடல் எடைப்பிரிவின் அரைஇறுதியில் சிறப்பான தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீராங்கனை நிகத் ஸரீன் 5-0 என்ற கணக்கில் பிரேசிலின் கரோலின் டி அல்மிடாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

57 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை மனிஷா 0-5 என்ற கணக்கில் டோக்கியோ ஒலோம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இர்மா டெஸ்டாவிடம்(இத்தாலி) தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். 63 கிலோ எடைப்பிரிவின் இரைஇறுதியில் இந்திய வீராங்கனை பர்வீன் 1-4 என்ற கணக்கில் அமை பிராட்ஹர்ஸ்டிடம் (அயர்லாந்து) தோலவி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory