» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி

வியாழன் 20, ஜனவரி 2022 8:13:42 AM (IST)இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பார்ல் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கேப்டன் பவுமா 110 ரன்களும், வான்டெர் துஸ்சென் 129 (96) ரன்கள் உதவியுடன் தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

இதையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் கே.எல். ராகுல் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். விராட் கோலி 51 ரன்களில் வெளியேறினார். அதிகபட்சமாக தவன் 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணிக்கு ஒருபுறம் ரன்கள் சேர்ந்தாலும், மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்ஸ்மேன்களான ஸ்ரேயஸ் அய்யர்(17), ரிஷப் பண்ட்(16), வெங்கடேஷ் அய்யர்(2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டடமிழந்தனர். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory