» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது வங்கதேசம் அணி!!

வியாழன் 2, செப்டம்பர் 2021 12:17:43 PM (IST)



டி-20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் சாதனைப் படைத்துள்ளது.

நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. வங்கதேச அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து 60 ரன்னில் சுருண்டது. அந்த அணியால் 16.5 ஓவரே தாக்குப்பிடிக்க முடிந்தது. லாதம், ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னைக் கடந்தனர்.

வங்கதேசம் அணி சார்பில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தினார். நசும் அகமது, ஷாகிப் அல் ஹசன், சாய்புதின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 61 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. அந்த அணி 15 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் டி-20 கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக நியூசிலாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் சாதனைப் படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory