» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா பெருமைக் கொள்கிறது: தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி பாராட்டு!

செவ்வாய் 27, ஜூலை 2021 11:28:36 AM (IST)



இந்தியா உங்கள் முயற்சியை கண்டு பெருமை கொள்கிறது என்று ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாம் சுற்றில் தோல்வி அடைந்த தமிழக வீராங்கனை பவானி தேவிக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை பவானி தேவி கலந்துக் கொண்டார். இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கின் வாள்வீச்சு போட்டியில் இரண்டாவது சுற்றில் பவானி தேவி தோல்வி அடைந்தார். வாள்வீச்சில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் அவர் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து வெளியேறினார்.

தனது தோல்வி குறித்து நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தனது ட்விட்டர் பக்கத்தில் பவானி தேவி பதிவிடிருந்தார்.இந்த நிலையில் பவானி தேவியை ராகுல் காந்தி பாராட்டி பதிவிட்டுள்ளார். அதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், " உங்களது முயற்சியை கண்டு இந்தியா பெருமை கொள்கிறது. வெற்றிக்கான பயணத்தில் இது மற்றுமொறு படி..”என்று பதிவிட்டுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் 1896 ஆம் ஆண்டு வாள்வீச்சு அறிமுகப்படுத்தப் பட்ட நிலையில் இந்த விளையாட்டில் இந்த ஆண்டுதான் முதன்முறையாக இந்தியாவில் இருந்து பங்கேற்க தகுதி பெற்றார் சென்னையைச் சேர்ந்த சி.ஏ.பவானி தேவி. கோயில் பூசாரி ஆனந்த சுந்தரராமன், இல்லத்தரசி ரமணி ஆகியோருக்கு மகளாக பிறந்த சடலவாடா ஆனந்த சுந்தரராமன் பவானிதேவி, அனைவராலும் சிஏ பவானிதேவி என அறியப்படுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory