» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரோனா பாதிப்பு: டாஸ் போட்ட பின்னர் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு!

வெள்ளி 23, ஜூலை 2021 12:18:02 PM (IST)வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்க சில நிமிடங்களே இருந்த  ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் முதலில் நடைபெற்றது. இதில் 4-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வென்ற நிலையில், 2- வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுவதாக இருந்தது. போட்டி தொடங்குவதற்காக டாஸ் போடப்பட்டது. 

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில்,  வெஸ்ட் இண்டீஸ் அணியின் நிர்வாக ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து, உடனடியாக போட்டி தொடங்குவது நிறுத்தப்பட்டது.  வீரர்கள் அனைவரும் ஓட்டல் அறைக்க்கு திரும்ப அனுப்பப்பட்டனர். அனைத்து வீரர்களுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதன் முடிவுகளின் அடிப்படையில் 2-வது ஒருநாள் போட்டி எப்போது நடைபெறும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thoothukudi Business Directory