» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய வீராங்கனை பாய்ந்து பிடித்த கேட்ச்: வைரலாகும் வீடியோ

சனி 10, ஜூலை 2021 4:18:34 PM (IST)

இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பாய்ந்து பிடித்த கேட்ச் ஒன்று, சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் பாய்ந்து பிடித்த கேட்ச் ஒன்று, சச்சின் உட்பட பல கிரிக்கெட் வீரர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இணையத்தில் அந்த வீடியோ வைரலலாகி உள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய பெண்கள் அணி 18 ரன்கள் (டி/எல் முறையில்) வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்லீன் அற்புதமான கேட்ச் ஒன்றைப் பிடித்து அசத்தியுள்ளார்.

நார்தாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. நாட் ஸ்கிவர் 55 ரன்கள் எடுத்தார். மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இந்திய அணிக்கு 8.4 ஓவர்களில் 73 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி, 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் மட்டும் எடுத்துத் தோல்வியடைந்தது. ஷஃபாலி வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்ததால் இந்திய அணியால் இலக்கை விரட்ட முடியாமல் போனது.


இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது 19-வது ஓவரில் ஆமி ஜோன்ஸ் சிக்சர் அடிக்க முயன்றார். பந்து சிக்சர் எல்லையைத் தாண்டிப் போகும் என நினைத்தபோது எல்லைக்கோட்டுக்கு அருகே நின்ற இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல், அற்புதமாகப் பந்தைப் பிடித்து ஆமி ஜோன்ஸை வெளியேற்றினார். கேட்ச் பிடித்தாலும் நிலை தடுமாறியதால் எல்லைக்கோட்டுக்கு வெளியே செல்ல இருந்தார் ஹர்லீன். உடனே பந்தை தூக்கி மேலே போட்டு விட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று அடுத்த நொடி உள்ளே வந்து பாய்ந்தபடி கீழே விழ இந்த பந்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

ஐபிஎல் 2022 தொடரில் 2 புதிய அணிகள் சேர்ப்பு

செவ்வாய் 26, அக்டோபர் 2021 10:54:16 AM (IST)

Sponsored AdsBlack Forest Cakes

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory