» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
த.வெ.க. அமைச்சர்கள் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர் : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 17, ஆகஸ்ட் 2026 8:39:13 AM (IST)

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் சில அமைச்சர்கள் டெண்டருக்குக் கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பரபரப்புக் குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார்.
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் நேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சிறப்பு விருந்தினராக மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி கலந்துகொண்டார். மேலும் கரு.நாகராஜன், சுமதி வெங்கடேசன், அமர் பிரசாத் ரெட்டி, ஸ்ரீகாந்த் கருணேஷ், சி.ராஜா, நரசிம்மன் உள்ளிட்டோர் மற்றும் திரளான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். பேரணி ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே நிறைவடைந்தது.
அப்துல் கலாமின் கோரிக்கையை ஏற்று நடிகர் விவேக் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டார். மீதமுள்ள 63 லட்சம் மரக்கன்றுகளை மக்கள் நட வேண்டும். அதன் பகுதியாக 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். அமைப்பு தொடங்கி 73 நாட்களில் 20 லட்சம் தன்னார்வலர்கள் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியவுடன் மக்களுக்கான அரசியல் இயக்கமாக இது மாற்றப்படும்.
மேகதாது அணைப் பிரச்சினையில் இரு மாநில முதல்வர்களையும் அமர வைத்துப் பேசித் தீர்வு காணப் பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய த.வெ.க. அரசுக்கு ஓராண்டு கால அவகாசம் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அண்ணாமலை, அரசின் ஊழல் தடுப்பு நடவடிக்கை குறித்துப் பேசுகையில்: "முதல்-அமைச்சர் விஜய் ஊழலுக்கு எதிராக இருப்பது உண்மைதான்.
ஆனால் சில அமைச்சர்கள் 'நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்து வந்தோம்' என்று கூறி, டெண்டருக்கு 3 முதல் 4 சதவீதம் வரை கமிஷன் வாங்க ஆரம்பித்துவிட்டனர். அதற்கான 'ஆடியோ' ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் உடனடியாகக் கடிவாளம் போட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாகர்கோவில் - கோட்டையம் இருமார்க்கங்களிலும் ரயில் இயக்க குமரி பயணிகள் சங்கம் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 8:06:13 PM (IST)

கேஸ் சிலிண்டர் முன்பதிவு: இ-கே.ஒய்.சி. ஆவணங்கள் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் நீடிப்பு!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:55:24 PM (IST)

காதல் விவகாரத்தில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை; பெண்ணின் தந்தை, தம்பி கைது!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 7:53:09 PM (IST)

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - சாலை மறியல்!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

ரயில் சூட்கேஸில் எலும்புக்கூடு வழக்கு: ஒடிசா பெண் படுகொலை? - வடமாநில தம்பதிக்கு வலை!
ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:52:27 AM (IST)








