» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மோதிரமலை பகுதியில் பாலம் கட்டும் பணி தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் ஆய்வு!

திங்கள் 25, மே 2026 10:29:28 AM (IST)



மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியில் நடைபெற்று வரும் பாலம் கட்டுதல் பணியினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில் "கன்னியாகுமரி மாவட்டம், கடையால் பேரூராட்சிக்குட்பட்ட மோதிரமலை கோலிஞ்சிமடம் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.88 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஓடை குறுக்கு பாலம் கட்டுமான பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மலைக்கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, மழைக்காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில் இந்தப் பாலப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது. பணிகளை எவ்வித தொய்வுமின்றி, தரமாகவும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள்ளும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்று தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory