» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:17:09 AM (IST)
மேட்டூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டூர் மேச்சேரி பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே நுழைந்தால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்புமணி பிரசாரத்தின்போது, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் உள்ளே நுழைய முயன்றதால், அவரைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுரை வழங்கினார்கள்.
அப்போது அங்கிருந்து போக மறுத்த வித்யா வீரப்பன், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அப்போது அவர் அழுதபடியே அங்கிருந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினார்கள்.
இது குறித்து வித்யா வீரப்பன் கூறுகையில், ”நாங்கள் சிந்தாமணி முதல் கோவிந்தபாடி வரை இருசக்கர வாகனப் பேரணி நடத்துவதற்காக முன்கூட்டிய அனுமதி பெற்றோம். ஆனால், அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார் என்பதற்காக எங்களை தடுத்து நிறுத்தினார்கள். நாங்கள் நீண்ட நேரமாக காத்திருந்தபோதும், எங்களுக்கு அந்த வழியாக செல்வதற்கு அனுமதிக்கவில்லை.
அதனால்தான் நான் அன்புமணி ராமதாஸிடம் சென்று இதைப்பற்றி கூறலாம் என்று சென்றேன், அவர் என்னை சிறுவயதிலிருந்து வளர்த்தவர், அந்த உரிமையில்தான் நான் அவரிடம் இதைப் பற்றி கூறலாம் என்று சென்றேன். ஆனால், அவர் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டார்.
என்னை மட்டும்தான் அனைத்து இடங்களிலும் சோதனை செய்கிறார்கள், வேறு எந்த வேட்பாளர்களையும் சோதனை செய்வதில்லை” என்று கூறினார். ”அவர் சரியான அனுமதி பெறவில்லை, அதனால்தான் தடுத்து நிறுத்தப்பட்டார்” என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதனால், அங்கிருந்த நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது செய்யப்பட்டார். இதனால், இப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டமன்ற பொதுத்தேர்தல் மினி மாரத்தான் போட்டி: ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்தார்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:55:14 PM (IST)

நடிகர் பார்த்திபனுக்கு சாதி, மதமற்றவர் சான்றிதழ் : வட்டாட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:52:09 PM (IST)

யூடியூபர் முக்தார் விவகாரம் : அதிமுக கூட்டணிக்கு ஆதரவு - நாடார் சங்கம் அறிவிப்பு!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:52:35 AM (IST)

வெற்றி வாகை சூடுவோம்; வரலாறு படைப்போம் : வாக்காளர்களுக்கு விஜய் வேண்டுகோள்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:45:56 AM (IST)

திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 10:21:00 AM (IST)

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)







